இளம் வயதினர் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பாலியல், போதைப்பொருள், அல்லது அபாயகரமான சண்டை காட்சிகள் இல்லாத வீடியோக்களையே இளம் பயனர்கள் காண முடியும்.பெற்றோரின் அனுமதியின்றி இவ்வமைப்புகளை மாற்ற முடியாது. இதற்காக “Limited Content” என்ற புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. சிறார்கள் தங்களை 18 வயதுக்கு மேற்பட்டோர் என குறிப்பிடினாலும், உண்மையைக் கண்டறிய மெட்டா சிறப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்.மேலும் தேவையற்ற கணக்குகளை பின்தொடர்வதும், தகவல் அனுப்புவதும், கருத்து தெரிவிப்பதும் கட்டுப்படுத்தப்படும். “Teen Accounts” அறிமுகமானதிலிருந்து இதுவே மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும். இது PG-13 தர மதிப்பீட்டு விதிகள் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

