புதிய கல்விக் கொள்கை மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கான நிதி வழங்குவதற்கான கோரிக்கையை முன்வைத்து, பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெருகிறது. முதலமைச்சர் இன்று மாலை சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க உள்ளார் .அவர், நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து, தமிழக நலனுக்கான திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்குமாறு வலியுறுத்துவார். மேலும், விரிவான கோரிக்கை மனுவும் அவர் வழங்க உள்ளார். சந்திப்பு முடிந்ததும், நாளை மாலையில் முதலமைச்சர் சென்னை திரும்புவார்.முதலமைச்சர், தமிழகத்தின் வளர்ச்சிக்கான முக்கியமான திட்டங்களை முன்னிலைப்படுத்தி, அவற்றுக்கான நிதி ஆதாரங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், விரிவான கோரிக்கை மனுவும் பிரதமரிடன் வழங்க உள்ளார்.இதன் மூலம், தமிழகத்தின் மேம்பாட்டிற்கான முக்கியமான திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பெற்றுக்கொள்வதற்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.