மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2016 ஆண்டிற்கு பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவதால் அவர் தீவிர அரசியலில் இருந்து விலகி உள்ளார்.
விஜயகாந்தின் உடல்நலக் குறைவு தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..
“ தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.