கோவையைத் தொடர்ந்து சேலத்தில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சிகளான பாமக, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அண்மையில் தனது கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமார்,நடிகை குஷ்பு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரச்சாரக் கூட்டத்தின் நுழைவு வாயில் ராமர் கோவில் மற்றும் “புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் பிரம்மாண்ட வடிவில் அமைக்கப்பட்டது.
பிரசார கூட்டத்துக்காக வந்த பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பிரதமர் மோடி, விழா மேடைக்கு திறந்த நிலை வாகனத்தில் ஊர்வலமாக வந்தார். அப்போது மக்கள் மோடி மோடி என்று உற்சாக முழக்கமிட்டு வரவேற்றனர். பிரதமர் மோடியுடன் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அந்த வாகனத்தில் வந்தார்.
பின்னர் பேசிய நடிகை குஷ்பு, சேலம் மாநாட்டுக்கு வந்த கூட்டம் காசு கொடுத்து அழைத்து வந்தது இல்லை என்றும், மோடியின் அன்பால் வந்த கூட்டம் என்றார். நாட்டையே பிரதமர் மோடியால்தான் காப்பாற்ர முடியும் என்றும் அவர் பேசினார். தமிழதகத்தின் மீதும் , தமிழ் மீதும் , தமிழ் மக்கள் மீதும் அக்கறை வைத்துள்ள மோடிக்கு இந்த தேர்தலில் வெற்றி தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தர், 3 ஆவது முறைல்ல, நான்காவது முறையும் மோடி பிரதமராவார் என்றார். மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு தடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் வருவதற்கு முன்னாள் பேசிய தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன், பாஜக வேட்பாளர் பட்டியல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளியாகும் என்றார்.
மேடைக்கு வந்த பிரதமர் மோடி கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பாஜக சார்பில் மோடிக்கு நினைவுப்பரிசாக வெள்ளிப்பாத்திரத்தில் ஜவ்வரிசியை வழங்கப்பட்டது. அவருக்கு அர்த்த நாரீஸ்வரர் சிலையும் பரிசாக வழங்கப்பட்டது.

