G20 மாநாட்டில் புதிய முன்னெடுப்புகளை முன்மொழிந்த பிரதமர் மோடி!

அரசியல் ஆப்ரிக்க நாடுகள் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் பொருளாதாரம் மாநாடு

ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, உலகம் முழுவதும் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் ஒன்றுடன் ஒன்று இணைந்த பிரச்சினையாக மாறி வருவதால், அதை நிறுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என அவர் வலியுறுத்தினார். மேலும், எதிர்காலத்தில் உலக நாடுகள் எதிர்கொள்ளும் சுகாதார சவால்களுக்கு தீர்வு காண வலுவான சுகாதார பாதுகாப்பு அமைப்பு தேவைப்படுவதாகவும், இதற்காக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார்.ஆப்பிரிக்காவின் பெரிய பலமாகக் கருதப்படும் இளைஞர்களின் திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகள் உருவாக்கம், தொழில்நுட்ப பயிற்சி ஆகியவை வளர்ச்சிக்கான முக்கிய விசைகள் என்று அவர் கூறினார். இவர்களின் திறமைகளை உலகளவிலான சந்தைகளில் பயன்படுத்தும் வழிகளை இந்தியா ஆதரிக்கும் என்றும் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *