பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் கோயில்கள் சித்தர்கள் சிறப்பு சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11 நாளான இன்று காலை தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது.
உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர். தேரோட்டத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
மேலும் 8 வது நாளில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது, மதுரையில் மீனாட்சி அம்மன் அரசியாக பட்டம் சூடிக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *