பிரதமர் நரேந்திர மோடி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்நாட்டு அதிபர் ஜேவியர் மிலேயுடன் எரிசக்தி, கனிமத் துறை மற்றும் மருந்துத் துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து பிரதமர் விவாதித்தார்.
முன்னதாக, பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அர்ஜெண்டினா பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் அங்கிருந்து பிரேசிலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் 2 நாட்கள் நடைபெறும் பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்கும் நிலையில், இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

