ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா இயற்க்கை கோயில்கள் சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை வரும் நிகழ்ச்சிகள்

ராமநவமியான ஏப்ரல் 6 ஆம் தேதி, ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பழைய ரயில்வே தூக்கு பாலம் சேதமடைந்ததால், பாம்பன் கடலில், 550 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
100 சதவீதம் நிறைவடைந்த பாலம் கட்டுமான பணியை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏப்ரல் 6 ஆம் தேதி பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.
ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்ல உள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து நேராக ராமேஸ்வரம் வர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ராம நவமியை ஒட்டி, ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி, ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து 6ஆம் தேதி பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *