மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, செப்டம்பர் 8 முதல் 10-ஆம் தேதி வரை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
அவரது குறுகிய கால பயணத்தில், வாஷிங்டன் டிசி மற்றும் டல்லாஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு ஒன்றிலும் கலந்தக் கொள் கொள்ள உள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா, இந்தப் பயணம் குறித்த செய்திகளை தெரிவித்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருப்பினும் ,பதவியேற்ற பிறகு ராகுல் காந்தியின் முதல் அமெரிக்கா பயணம் இதுவாகும்.
ராகுல் காந்தியை புலம்பெயர்ந்த இந்தியர்கள், கல்வியாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் அனைவரும் சந்திக்கவும் தொடர்பு கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர்.
ராகுல் காந்தியின் வருகை மூன்று நாள் பயணமாகும். ஆனால், மூன்று நாட்களில் அனைவரையும் சந்திக்கும் படி நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி செப்டம்பர் 8 ஆம் தேதி டல்லாஸ் நகருக்குச் செல்கிறார். தனது பயணத்தின் போது, டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள்,.
உள்ளூர் கல்வியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் அவர் உரையாடல்களில் பங்கேற்க்க உள்ளார்.
கூடுதலாக, ஒரு பெரிய சமூகக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது, அதனுடன் தொழில்நுட்ப வல்லுநர்களுடனான சந்திப்புகள் மற்றும் முக்கியமான டல்லாஸ் தலைவர்களுடன் ஒரு இரவு உணவு ஆகியவன அடங்கும்.
செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில், ராகுல் காந்தி தனது சுற்றுப்பயணத்தை வாஷிங்டன், டி.சி யில் தொடருவார் , அங்கு அவர் இதேபோன்ற நிகழ்வுகளில் ஈடுபடுவார்.
காங்கிரஸ் தலைமையிலான மாநிலங்களின் ஆட்சியில் கணிசமான ஆர்வம் இருப்பதாக பிட்ரோடா வலியுறுத்தினார், விவாதங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்டவை ஆகும்.
முன்னதாக,ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றார். இருப்பினும், அவர் தனது வயநாடு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தார்.
அவரது சகோதரி பிரியங்கா காந்தி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது. முன்னதாக ஜூன் மாதம், காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சி சார்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்திக்கு ஒப்புதல் அளித்தது.