இந்தோனேசியா என்பது எரிமலைகள் அதிகமாக உள்ள நாடாகும். அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட செயலில் உள்ள எரிமலைகள் உள்ளன. அவை ‘பசிபிக் ரிங் ஆஃப் பயர்’ எனப்படும் தீக்கோட்டில் இருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை செயல்பாடு ஏற்படும்.இந்நிலையில், ஜாவா (Java) என்ற பெரிய தீவில் உள்ள செமேரு (Semeru) எரிமலை இன்று திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. வெடிப்பின் போது வானத்தை மூடுமளவுக்கு கரும்புகை, சூடான சாம்பல், லாவா எனப்படும் எரியும் பாறை குழம்புகள் வெளியேறின.எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் பல கிலோமீட்டர் உயரத்திற்கு எழுந்ததால், அந்த பகுதியின் வானமும் இருண்டது. அருகிலுள்ள கிராமங்களில் சாம்பல் மழை போல விழுந்ததாகவும் தகவல். சுவாசப் பிரச்சனை ஏற்படக் கூடும் என்பதால் மக்கள் முககவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

