கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவராகக் கருதப்படும் போர்ச்சுகலைச் சேர்ந்த ரொனால்டோ ஏற்கெனவே ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.
இந்நிலையில் நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இதில் கோல் அடித்த ரொனால்டோ 900 கோல்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
இதுவரை 1236 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ, ஒட்டுமொத்தமாக அடித்த 900 கோல்களில் ரியல் மாட்ரிட் அணிக்காக மட்டும் சரி பாதி அளவில், அதாவது 450 கோல்கள் அடித்துள்ளார்.
900 கோல்கள் அடித்த ரொனால்டோவை ரசிகர்கள் வாழ்த்தி சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.