மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு தென்னிந்திய திரையுலகின் சார்பில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தென்னிந்திய திரைத்துறையினருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சைமா விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா துபாயில் கோலாகலமாக நடைபெற்றது.
இதில், தமிழ்த் திரைப்படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்கள் மட்டுமின்றி, அரசியல், மற்றும் மகத்தான பல தொண்டுகள் செய்த விஜயகாந்தின் நினைவினை கௌரவிக்கும் வகையில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. நடிகர்கள் அர்ஜுன், விக்ரம், SJ சூர்யா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், யோகி பாபு மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் இணைந்து இந்த விருதினை வழங்கி மரியாதை செலுத்தினர்.
இந்த விருதினை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார்.
