ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கவுரவத் தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்றிரவு 12 மணிக்கு

இசை இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் “லால் சலாம்” படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது இணையரான நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படமும், படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடலும் இந்திய அளவில் பிரபலமானதோடு, மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து 2015- ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ”வை ராஜா வை” என்ற படத்தை இயக்கினார். பிறகு சிறிது இடைவெளிக்குப் பிறகு ‘ஓ சாத்தி சால்’ என்ற ஹிந்தி படத்தை இயக்கி பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக போவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் மற்றும் அதன் பின்னணியில் நடைபெறும் அரசியலை மையமாக வைத்து உருவாகி வரும் “லால் சலாம்” திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கேமியோ ரோலில் நடித்து வருகிறார்.
லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கான அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி, அதற்கான படப் பூஜை நடைபெற்ற நிலையில், லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மார்ச் 7-ஆம் தேதி தொடங்கி, தற்போது முடிவடைந்துள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லால் சலாம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இது குறித்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “34 நாட்கள் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது என குறிப்பிட்டு புதிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் வெளியிட்டார். மேலும் இந்த 34 நாட்களும் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் லைக்கா நிறுவனம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தின் அப்டேட் குறித்து வெளியிட்டுள்ளது. அதில் ” நமது பாய் மும்பைக்கு திரும்பியுள்ளார்” என குறிப்பிட்டு இன்று நள்ளிரவு லால் சலாம் படத்தில் ரஜினி கதாபாத்திரம் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.