பங்குச் சந்தையில் இன்று சரிவு ஏற்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 73,294 ஆகவும், நிஃப்டி 200 புள்ளிகள் குறைந்து 22,242 ஆகவும் சரிந்தது. பவர் கிரிட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், என்பிடிசி, இண்டஸ்இண்ட் பேங்க், எச்சிஎல் டெக், டாடா மோட்டார்ஸ், எம்&எம், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன் மற்றும் ஆக்சிஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் இன்று சரிவை கண்டுள்ளன.
இன்றைய சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நிகர அடிப்படையில் ரூ. 2168 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 781.39 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஹிந்துஸ்தான் யுனிலீவர், டெக் மஹிந்திரா, பிரிட்டானியா, நெஸ்லே இந்தியா மற்றும் டிசிஎஸ் ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன. மறுபுறம், பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட், ஓஎன்ஜிசி, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஹிண்டால்கோ ஆகியவை அதிக நஷ்டமடைந்துள்ளன.