அமெரிக்காவில் குடியேற கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை 855% உயர்ந்துள்ளது.

இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் குடியேற கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது. 2021-ம் நிதியாண்டில், அமெரிக்க அரசுக்கு 4,330 இந்தியர்கள் குடியேற கோரிய விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர், ஆனால் 2023-ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 41,330 ஆக உயர்ந்துள்ளது, இது 855 சதவீதம் (எட்டரை மடங்குக்கு மேல்) அதிகரிப்பைக் குறிக்கிறது என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தகவல்களை வழங்குகிறது. இதில், சுமார் பாதி இந்தியர்கள் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். இது, அமெரிக்காவில் குடியேறுவதற்கான இந்தியர்களின் தீவிர விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. 2012-ம் நிதியாண்டில் 1,330 இந்தியர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்கள் அமெரிக்காவில் குடியேற்ற பெற்றனர். 2022-ல், இந்த எண்ணிக்கை 4,260 ஆக உயர்ந்தது, இது 3 மடங்கு அதிகமாகும். 2023-ல், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை கடந்த அக்டோபரில் வெளியிட்ட ஆண்டறிக்கையின் படி, மேலும் 5,340 இந்தியர்களுக்கு குடியேற்றம் வழங்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *