லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம், இளையராஜா சாதனை.

இசை இந்தியா இயற்க்கை உலகம் சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு

ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை உருவாக்கி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்ற இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா, லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் முடித்து சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில், தமிழக அரசு சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. “அரசு மரியாதைக்கும், மக்களின் அன்புக்கும் நன்றி” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற ஈவண்டின் அப்பல்லோ அரங்கில் 8–ந்தேதி, தனது மேற்கத்திய கிளாசிக்கல் இசை தொகுப்பான ‘வேலியன்ட்’ சிம்பொனியை அரங்கேற்றினார். இதையொட்டி, திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிய பிறகு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. விமான நிலையத்தில் நிருபர்களுடன் நடந்த சந்திப்பில், இளையராஜா தனது கருத்துகளை பகிர்ந்தார். அவர் கூறியதாவது, “எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி. மிகவும் நன்றி. மகிழ்ச்சியுடன், மலர்ந்த முகத்தோடு, நீங்கள் என்னை அனுப்பி வைத்தது இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் செய்தான். இது சாதாரணமான விஷயம் அல்ல. இசைக் குறிப்புகளை யாரும் எழுதலாம், ஆனால் அவற்றை வாசிக்கும் போது ஒவ்வொருவரும் தனித்தனியாக வாசித்தார்கள். மேலும், சிம்பொனியின் இரண்டாவது பகுதியில் நான் இசையமைத்த திரைப்படப் பாடல்கள் ஒலித்தன. அதில் ஒரு பாடலை நான் அவர்களுடன் சேர்ந்து பாடினேன். ஆனால் அவர்களுடன் பாடுவது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. மக்கள் அதற்கான நல்ல வரவேற்பை அளித்தனர். இந்த சிம்பொனி இசை வல்லுநர்களால் பாராட்டப்பட்டு, ஒரு சிறந்த சிம்பொனியாக மாறியுள்ளது. மேலும் 13 நாடுகளில் சிம்பொனி அரங்கேற்றம் செய்யப்படும் என்றும் உங்கள் வாழ்த்துகளுக்கான நன்றி என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *