கலிபோர்னியாவில் இந்து கோயிலுக்கு எதிரான தாக்குதல்.

அரசியல் ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா உலகம் கோயில்கள் சிறப்பு செய்திகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட்டம்/ கலவரம் வட அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சினோ ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்து கோயிலான ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் என்ற கோயிலை மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தி கோயிலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளை வலியுறுத்துகிறோம். அதோடு, வழிபாட்டு தலங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால். பாப்ஸ் சுவாமி நாராயண் மந்திர் தாக்குதல் தொடர்பான ஒரு அறிவிப்பை கோவில் சார்பில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “மீண்டும் ஒரு இந்து கோயில் மீது தாக்குதல் நடைபெறுகிறது. பிரிவினை, கருத்து வேறுபாடுகளை உருவாக்கும் எந்த செயலை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். வெறுப்புணர்வை தூண்டும் எந்த செயலைவும் வன்மையாக கண்டிக்கிறோம். வெறுப்புணர்வு வேரூன்ற விடமாட்டோம். எங்களுடைய பொது வானம், மனித நேயம், நம்பிக்கை மற்றும் அமைதி ஆகியவற்றை பாதுகாப்பது முக்கியம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நியூயார்க் நகரில் உள்ள பாப்ஸ் கோவிலுக்கு மர்ம நபர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். இதற்குப் பிறகு, செப்டம்பர் 25-ம் தேதி கலிபோர்னியாவின் சேக்கர்மென்டோ பகுதியில் உள்ள சுவாமி நாராயண் மந்திர் மீது மீண்டும் தாக்குதல் நிகழ்ந்தது. தற்போது, சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள கோயிலுக்கு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *