நடிகர் சூர்யா குடும்பத்தினர், கேரளாவுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளித்துள்ளனர்.
கேரளாவில் 2 நாட்களுக்கு முன்பாக நள்ளிரவு சுற்றுலாத் தலமான வயநாட்டில் முண்டக்கை கிராமத்தின் அருகில் உள்ள மலையில் கடும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதே வேகத்தில் அது முண்டக்கை கிராமத்தின் மீது விழுந்து அழுத்தியது. அத்துடன் நில்லாமல் அதே வேகத்தில் சூரல்மலை பகுதியை நோக்கி சென்றது. அங்கு நிவாரண முகாமாக செயல்பட்டு வந்த பள்ளி அருகே காலை 4 மணி அளவில் நிலம் சரிந்து , மக்கள் நிர்கதியாகினர்.
இந்த நிலையில், நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து 50 லட்சம் ரூபாயை கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இதே போன்று, நடிகர் பகத் பாசில் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான நஸ்ரியா ஆகியோர் இணைந்து 25 லட்ச ரூபாய் நிவாரண நிதியை கேரள அரசுக்கு வழங்கியுள்ளனர்.