வேளாண் வணிகத் திருவிழா மற்றும் உணவுப் பொருட்கள் கண்காட்சி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விவசாயம் விளம்பர செய்திகள் விளம்பரங்கள்

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெறும் வேளாண் விளைப்பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்களின் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
வேளாண் வணிக திருவிழா எனப்படும் வேளாண் விளை பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கி அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் நடைபெறுகிறது. சென்னை நந்தப்பாக்கத்தில் அமைந்து இருக்கும் வர்த்தக மையத்தில் நடைபெறும் இந்த வேளாண் வணிக திருவிழா மற்றும் கண்காட்சியை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உள்ளார்.
இந்த வேளாண் வணிக திருவிழா 100 க்கும் அதிகமான அரங்குகள் இடம்பெற்று உள்ளன. இந்த திருவிழாவுடன் சேர்த்து பாரம்பரிய மற்றும் சிறுதானிய உணவகங்கள் கலந்துகொள்ள இருக்கும் உணவு திருவிழாவும் நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் நூற்றுக்கும் அதிகமான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்கிறார்கள். அதேபோல் உணவு பொருட்களை பதப்படுத்துவதற்கான இயந்திரங்களும், மதிப்புக்கூட்டும் இயந்திரங்களும் இதில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
வேளாண் துறை வல்லுநர்கள் கலந்துகொள்ள உள்ள கருத்தரங்குகள், உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கும் இந்த திருவிழாவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் முக்கிய நிகழ்வாக ஏற்றுமதியில் சிறந்து விளங்கக்கூடிய விவசாயிகளுக்கும், சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *