தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கோலாகல கொண்டாட்டம்.

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் உலகம் கோயில்கள் சிங்கப்பூர் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மலேசியா

தைப்பூச திருநாளான இன்று உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்றது. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள முருகன் கோயில்களில் தைபூச திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.பழனியில் பல ஆயிரம் பக்தர்கள் பாதையாத்திரையாக சென்று முருகனை வழிப்பட்டனர். திருச்செந்தூர்ரில் பக்தர்கள் கடலில் புனித நீராடினர். அதே போல் திருத்தணி, திருபரங்குன்றம், சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மலேசியாவில் சிலாங்கூரில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்றது. நேற்று முதல் இன்று வரை 15 லட்சம் பக்தர்கள் முருகனை வழிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *