ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று தர நிறுவனம் ஐகியூஏர் (IQAir) வெளியிட்ட 2025 உலக காற்று தர அறிக்கையில், டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் காற்று தரக் குறியீடு (AQI) 350 என பதிவாகியுள்ளது .இந்த அளவு கடுமையான காற்று மாசுபாடை குறிக்கிறது. இந்தியர்களின் சுகாதாரத்துக்கு பெரிய அச்சுறுத்தலாகவும், மனிதர்களின் ஆயுளை சராசரியாக 5.2 ஆண்டுகள் குறைக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பட்டியலில் இந்தியாவின் மூன்று முக்கிய நகரங்கள் இடம்பிடித்துள்ளது. மும்பை 5-வது இடம், கொல்கத்தா 8-வது இடம், மேலும் பாகிஸ்தானின் லாகூர் 2-வது மற்றும் கராச்சி 4-வது இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

