அமெரிக்கா, ஈரான் ஏவுகணை திட்டத்துக்கு உதவியது என்று கூறி ஒரு இந்திய ரசாயன நிறுவனத்திற்கு பொருளாதாரத் தடை (Economic Sanction) விதித்துள்ளது.மராட்டியத்தில் உள்ள பார்ம்லேன் (Pharmalean) என்ற நிறுவனம்,ஏவுகணை தயாரிக்க பயன்படுத்தப்படும் சில ரசாயனங்களை (Sodium Chlorate, Sodium Perchlorate) அரபு அமீரக நிறுவனத்துடன் சேர்ந்து ஈரானுக்கு அனுப்பியது என்று அமெரிக்கா கூறுகிறது. அதனால் அந்த நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பொருளாதாரத் தடை என்றால் என்ன?ஒரு நாடு, நிறுவனம் அல்லது ஒருவருக்கு பிற நாடுகள் பணம் மற்றும் வணிகத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது.இது பொதுவாக — சட்டவிரோத செயல்கள், மனித உரிமை மீறல், உலக அமைதிக்கு ஆபத்தான செயல்களை நிறுத்த — செய்யப்படும் நடவடிக்கை.சமீபத்தில் அமெரிக்கா, ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் உற்பத்திக்கு உதவுவதாக கூறிஈரான், சீனா, UAE, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் 32 நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.இதில் இந்தியா நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

