டில்லியிலிருந்து காத்மண்டு மற்றும் ஹாங்காங் வரையிலான விமான சேவை வரும் நவம்பர் 1 முதல் தொடங்கும்; விஸ்தாரா அறிவிப்பு

அரசியல் இந்தியா உலகம் சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

காத்மண்டு- டெல்லி- ஹாங்காய் வழித்தடத்தில் நவம்பர் 1 முதல் விமான சேவை தொடக்கப்பட உள்ளது. டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக செயல்படும் விஸ்தாரா விமான சேவை நிறுவனத்திற்கு ஏற்பட்ட சந்தை வீழ்ச்சியின் காரணமாக தற்போது இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக இந்தியாவிலிருந்து ஹாங்காங் வழித்தடத்தில் விமானத்தை இயக்கவுள்ளது.
இந்த வழித்தடத்தில் A320 ரக விமானங்களைப் பயன்படுத்த சேவை வழங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த வழித்தடத்தில் தினசரி விமானங்களையும் இயக்கவிருக்கிறது விஸ்தாரா. தற்போது 61 விமானங்களைக் கொண்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது இந்நிறுவனம், இந்த 61 விமானங்களில், 46 விமானங்கள் ஏர்பஸ் A320 நியோ வகையைச் சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஏர்பஸ் A321 ரக விமானங்களையும், 5 போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானங்களையும் கொண்டுள்ளது விஸ்தாரா.மேலும், உலகம் முழுவதும் 30 இடங்களுக்கு தொடர்ந்து பயணிகள் விமானத்தை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோடு இந்த விமானம் நவம்பர் 1 ஆம் தேதி முதல், டெல்லி மற்றும் ஹாங்காங் இடையே தினசரி விமானங்கள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *