திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பாக 4 மாநிலங்களில் 2068 கோயில்கள் கட்டப்படும் – தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் சித்தர்கள் செய்திகள் நிகழ்வுகள் வரும் நிகழ்ச்சிகள்

4 மாநிலங்கள்.. 2068 புதிய கோவில்களை கட்டும் திருப்பதி தேவஸ்தானம்.. முக்கிய அறிவிப்பு!
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பகுதி வாரியாக 2068 கோவில்களை கட்டும் பணியில் திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
பக்தர்களின் நன்கொடை மூலம் ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 2068 புதிய கோவில்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டி வருகிறது.
புதிதாக கட்டப்படும் இந்த கோவில்களின் கட்டுமான பணிகள் இன்னும் ஆறு மாதத்திற்குள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடத்தப்படும். இது தவிர மிகவும் பழமையான 150 கோவில்களை மறுசீரமைக்க தேவஸ்தான நிர்வாகம் 130 கோடி செலவு செய்யப்படுகிறது.
மேலும், “ இந்த பணிகளுக்கான பணம் விஐபி தரிசன டிக்கெட் வாங்குவதற்காக பக்தர்கள் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் என்ற கணக்கில் வழங்கும் நன்கொடை பணத்திலிருந்து செலவு செய்யப்படுகிறது.
இந்து தர்ம பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய மக்கள் வசிக்கும் பகுதிகள், மீனவர் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில் புதிய கோவில்களை கட்டுவதுடன், பழைய கோவில்களை சீரமைக்கும் பணியிலும் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி தவிர மற்ற மாநிலங்களிலும் இதுபோல் கோவில்கள் கட்டப்படும்.
சமரசட்டா சேவா பவுண்டேஷன் ஒத்துழைப்புடன் 32 கோடி செலவில் 360 கோயில்கள் கட்டப்படுகின்றன. ஆந்திர மாநில அறநிலையத்துறையின் ஒத்துழைப்புடன் 100 கோடி ரூபாய் செலவில் 932 கோவில்களை கட்டும் பணி நடைபெறுகிறது. மேலும் 667 கோவில்களை கட்ட பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதிதாக கோவில்களை கட்டுவதற்காக பக்தர்கள் விடுத்துள்ள வேண்டுகோள்களை பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது”  எனவும் தேவஸ்தானம் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *