தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் 94.56 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற அறிவிப்பினை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட சற்று அதிகம். மேலும், இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை – 397, 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை – 2,478, அரசுப்பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 91.32%, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 95.49%, தனியார் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 96.7%, மகளிர் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 96.39%, ஆண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 86.96%. இருபாலர் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 94.7% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.