டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஜெர்சி அறிமுகம்; ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளில் நடைபெறுகிறது

இந்தியா உலகம் சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கான புதிய ஜெர்சி இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்று விளையாடுகின்றன.
இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் Aல் உள்ள இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணியுடன் தனது முதல் போட்டியை விளையாடுகிறது. ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தான் அணியுடனும், ஜூன் 12-ம் தேதி அமெரிக்கா, ஜூன் 15-ம் தேதி கனடா ஆகிய அணிகளுடனும் மோதுகிறது.
அணியின் வீரர்களான ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பந்த்( விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன்( விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா,(துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சகல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் இந்திய அணியின் ஜெர்சியை அடிடாஸ் அறிமுகம் செய்துள்ளது. தரம்சாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் கேப்டன் ரோகித் ஷர்மா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் முன்னிலையில் இந்த புதிய ஜெர்சியை விமரிசையாக அறிமுகம் செய்யப்பட்டது.
ஹெலிகாப்டரில் ராட்சத இந்திய அணி ஜெர்சியை பறக்கவிட்டப்படி மாஸாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வீடியோவை அடிடாஸ் நிறுவனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *