மதுரை மாவட்டத்தில் மே 5ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41 ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதில் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரையில் ஒன்றுகூட உள்ளனர்.
இந்நிலையில், மதுரை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அடைக்கப்படும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டையொட்டி கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் 5 தீர்மானங்கள் பிரகடன தீர்மானமாக கொண்டு வரப்பட உள்ளன. அந்த தீர்மானங்களை அரசு பரிசீலிக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.