இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது; 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்

இந்தியா உயர்கல்வி கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

2024ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வானது, நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில் சுமார் 23.8 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் மே 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
மதியம் 2 மணிக்கு தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாக, அதாவது மதியம் 12 மணிக்கு தேர்வு மையங்கள் திறக்கப்பட்டு, தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பகல் 1.30 மணிக்குப் பிறகு தேர்வு மையத்திற்குள் வர, தேர்வர்களுக்கு அனுமதி இல்லை.
ஹால் டிக்கெட் இல்லாத தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதி இல்லை.
உங்களது அடையாள எண்ணுக்கு, எந்த தேர்வு அறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பு பலகை மூலம் கண்டறிந்து தேர்வு அறைக்கு செல்லவும்.
ஹால் டிக்கெட் உடன் அசல் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை கொண்டு செல்ல வேண்டும். அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அடையாள அட்டைகள் ( PAN card/Driving License/Voter ID/Passport/Aadhaar Card /Ration Card/ Class 12 Admit Card )
ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு செல்லுங்கள்
ஒரு போஸ் கார்டு அளவு புகைப்படம் ( இந்த புகைப்படமானது ஹால் டிக்கெட்டில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
தேர்வு தொடங்கியதையடுத்து, தேர்வு முடியும் வரை அறையில் இருந்து தேர்வர்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை.
தண்ணீர் பாட்டில்கள், டீ, காபி, குளிர்பானங்கள் அல்லது தின்பண்டங்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. ஆனால் நீரிழிவு நோயால்( சர்க்கரை நோயாளிகள் ) பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்கள் சர்க்கரை மாத்திரைகள்/பழங்கள் போன்ற உண்ணக்கூடிய உணவுகளை, முன்கூட்டியே அனுமதி பெற்று கொண்டு செல்லலாம்.
எந்த காரணத்தை கொண்டும், தேர்வு தேதியை தவிர , இதர நாட்களில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு முன்னர், முக்கியமான விதிமுறைகள் தேர்வர்களுக்கு தேர்வு கண்காணிப்பு அதிகாரி தெரிவிப்பார். தேர்வு மையங்களில் மற்றும் அதன் அருகிலே புகைப்பிடித்தலுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக படித்து பின்பற்றவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *