இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா நிபந்தனை.

அமெரிக்கா அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் ரஷ்யா

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் மட்டுமே இந்தியாவிடம் வர்த்தக பிரச்சனைகள் தீர்க்கப்படும் என அமெரிக்க தெரிவித்துள்ளதால் பேச்சுவார்த்தை தொடர்வதில் பெரும் குழப்பம் நிலவியது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீர்கொலைத்தால் மட்டுமே அந்நாட்டின் அதிபர் புத்தின் இறங்கி வருவார் என்று ட்ரம்ப் நம்புகிறார். சீனா, இந்தியா ஆகியவை கச்சா எண்ணெய் வாங்குவதால் தான் ரஷ்யாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளதாக கருதும் அவர், கொள்முதலை நிறுத்தாத இந்தியாவுக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் 50% இறக்கும்மதி வரி விதித்துள்ளார். வர்த்தக தடைகளை நீக்க ட்ரம்ப் விருப்பம் தெரிவித்த நிலையில், அதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்தார். இதனையடுத்து பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் வரும் நவம்பர் மாதத்திற்குள் நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இருதலைவர்களும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது இந்திய நிறுத்தினால் மட்டுமே வர்த்தக பிரச்சனை தீர்க்கப்படும் என்று அமெரிக்க வர்த்தகத்ததுறை அமைச்சர் ஹாவர்ட் லூட்னி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நிபந்தனையை அமெரிக்க அமைச்சர் விதித்திருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *