ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மற்றும் முன்னாள் குத்துச்சண்டை வீரர் வினேஷ் போகட் ஹரியானாவின் ஜுலானா சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். “உண்மை வென்றது” என்று தனது தேர்தல் வெற்றிக்கு பிறகு கூறியுள்ளார் வினேஷ் போகட். தற்போதைய நிலவரப்படி, பிஜேபி ஹரியானா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை கடந்துள்ளது மற்றும் 50 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது, அதே சமயம் காங்கிரஸ் 35 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் பிஜேபி, ஹரியானா மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க உள்ளது . 30 வயதான போகட், எதிர்த்து போட்டியிட்ட பிஜேபியின், கேப்டன் யோகேஷ் பைராகி மற்றும் INDIA கூட்டணியின் உறுப்பினராக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் கவிதா தலால் ஆகியோரைக் 6,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.