சோமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தனது மனைவியுடன், உணவு டெலிவரி செய்த வீடியோ இணையத்தில் வைரல்.ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சோமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் ஒருநாள் டெலிவரி மேனாக மாறியுள்ளார். சோமேட்டோ எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிய தீபிந்தர், சோமேட்டோ சிறுடை அணிந்து, தனது மனைவியுடன் டெலிவரி ஏஜென்டு போல் உணவு டெலிவரி செய்துள்ளார். ஹரியானாவின் குருகிராமில் உள்ள அம்பீயஸ் மால் இருந்து ஆர்டரைப் பெறும்போது, உள்ளே அனுமதிக்க மறுத்ததாகவும் லிப்ட்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், உணவு ஆர்டர்களைப் பெற அவர்கள் படிக்கட்டுகளில் காத்திருக்க வேண்டி இருந்தது என்று தீபிந்தர் கோயல் தனது Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது பதிவுக்கு பதிலளித்த ஆம்பியன்ஸ் மாலின் உரிமையாளர், நிலைமையை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். டெலிவரி பாட்னர்கள் காத்திருக்கும் வகையில் mall il இப்போது ஒரு உணவு டெலிவரி பிக்- அப் Point யை அமைத்துள்ளது. எனது பதிவைக் கவனித்து விரைவான நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி என்று தீபிந்தேர் கோயல் தெரிவித்துள்ளார்.
