அண்ணா பல்கலைகழகம் தற்போது மோசடியில் ஈடுபட்ட 900 போலி பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை விதித்து அதிரடியாக உத்தரவை அறிவித்துள்ளது.
பேராசிரியர்களின் தகவல்களை ஆய்வு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.
இதை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இதற்கிடையில், அண்ணா பல்கலைக்கழக கூட்டத்தில் இந்த விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றன.
ஆண்டு ஆய்வின் போது பல்கலைக் கழக உறுப்பினர்களிடம் போலி ஆதார் மற்றும் பான் கார்டுகளை சில கல்லூரிகள் சமர்ப்பித்தது ஏன் ? என்பதை விளக்க வேண்டும்” என்று துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறினார்.
ஆளுநர் ஆர் என் ரவியின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. விதிமீறல் குறித்து அறிந்ததும், நிலைமை குறித்து முழுமையான அறிக்கையை ஆளுநர் கோரினார்.
இதன் விளைவாக, பல்கலைக்கழகம் தனது ஆரம்ப விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.
மோசடிப் பேராசிரியர்கள் விவகாரத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட 295 தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், சுமார் 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை அனைத்து உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வதாக அண்ணா பல்கலைக்கழக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.