
என்ஆர்ஐ க்களின் முதலீடுகள் குறித்து ஐ-டி துறையினர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ளவர்கள் உட்பட கணிசமான எண்ணிக்கையிலான வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகளை மறுமதிப்பீடு செய்வதற்காக வருமான வரி துறையிடமிருந்து 148/148A பிரிவுகளின் கீழ் விளக்கம் கேட்டு ஆணைகளை (நோட்டீஸ்) பெற்றுள்ளனர்.
அசையா சொத்துக்களை வாங்குதல், பத்திரங்கள் அல்லது வைப்புகளில் முதலீடு செய்தல் அல்லது இந்தியாவிலிருந்து வெளிவரும் பணம் போன்ற அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்கள் அதில் கேட்கப்பட்டுள்ளது.
மேலும் ஆச்சரியப்படுத்தும் வகையில், இந்தியாவில் உள்ள அவர்களது வெளிநாட்டு நாணயம் அல்லாத (FCNR) கணக்குகள் தொடர்பான விவரங்களும் கோரப்பட்டுள்ளன.
அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தின் மூலம் வரும் வட்டி வருமானத்திற்கு வரிவிலக்கு உண்டு மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட நிதி முழுமையாக திருப்பி அனுப்பப்படும்.
“இயற்கையாகவே, ஒரு நபர் திடீரென்று ஒரு பெரிய FCNR டெபாசிட் வைத்திருக்கும் போது, I-T துறையானது ஆதாரத்தைப் பற்றி விசாரிக்க வேண்டும் – அதனால்தான் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது” என்று மனோகர் சௌத்ரி & அசோசியேட்ஸின் வரி பங்குதாரர் அமீத் படேல் விளக்குகிறார்.
ரஷ்மின் சங்வி & அசோசியேட்ஸின்
பங்குதாரரான ருத்விக் சங்வி, “பல என்ஆர்ஐக்கள் இந்தியாவிற்குள் இருந்து பெருமளவில் வரிவிலக்கு பெற்ற வருமானத்தைப் பெறுகிறார்கள். மேலும் அவர்கள் சட்டத்தால் கட்டாயப்படுத்தப்படும் வரை வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய விரும்புவதில்லை. இவர்கள் வருமான வரித்துறையின் வாரியத்தின் கீழ் ‘தாக்கல் செய்யாதவர்கள்’ எனக் பிரிக்கப் படுகிறார்கள்.
I-T துறையின் இந்த அறிவிப்புகளை, வருமானம் மதிப்பீட்டில் இருந்து தப்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகளை சீராக்கும் என்று சிலரும் இது வெறும் கண் துடைப்பு நாடகம் என்றும் கூறிவருகின்றனர்.

