ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இந்திய இளம் படை. 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி.
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார். ஆஸி அணியிலும் பல மாற்றங்கள் செய்திருந்தனர்.
இந்நிலையில் டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இந்திய அணி தரப்பில் ஓப்பன் பேட்ஸ்மேன்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 399 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து 400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. தொடக்கம் முதலே அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்களை எடுக்க முடியாமல் தடுமாறினர். 28 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனிடையே ஆட்டத்தின் நடுவே மழையும் அடித்து ஆடியதால் இடையிடையே போட்டி நிறுத்தப்பட்டு நடத்தப்பட்டது. இறுதியாக டிஎல்எஸ் முறையின் அடிப்படையில் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் வாயிலாக 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2 போட்டிகளை வென்றதன் மூலம் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

