ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்கள் வெல்லப்போவது உறுதியானது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஏற்கெனவே 95 பதக்கங்களை வென்றுள்ளது. அதாவது இந்திய அணி இதுவரை 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களைப் பெற்றுள்ளது. மேலும், 5 பதக்கங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
ஆடவர் கிரிக்கெட், கபடி, வில்வித்தை, பேட்மிண்டன் ஆகிய பிரிவுகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவில் பதக்க எண்ணிக்கையில் இந்தியா சதமடித்துள்ள நிலையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்திய வீரர்கள் இன்னும் சில போட்டிகளில் பங்கேற்க இருப்பதால் பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

