வெளிநாடுவாழ் தமிழர் இந்தியர் நலச்சங்கத்தின் சார்பாக முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் வட அமெரிக்கா விண்வெளி சார்ந்தவை

வெளிநாடுவாழ் தமிழர் இந்தியர் நலச்சங்கத்தின் அமெரிக்க கிழக்கு தலைவர் நியூஜெர்சி பாலா அவர்களின் முன்னெடுப்பில் அமெரிக்காவின் நியூசெர்சி மாநிலத்தில் பிராங்களின் நகர மேயர் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த முன்னாள் துனை மேயர் திரு.ராம் அன்பரசன் அவர்கள் இந்தியாவின் நிலவு மனிதன் என்று புகழப்படும் சந்திராயன்-1 மற்றும் 2 திட்ட இயக்குனரும், நிலவில் நீர் இருப்பதை உலகுக்கு தெரியபடுத்தி தமிழினத்திற்க்கே பெருமை தேடி தந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி் கழகத்தின் முன்னாள் இயக்குனரும், பத்மஷீ விருதுப் பெற்றவருமான முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாக பாராட்டு பத்திரம் வழங்கினார்.இந்நிகழ்வை வெளிநாடுவாழ் தமிழர் இந்தியர் நலச்சங்கத்தை சேர்ந்த இளமாறன் ஒருங்கிணைத்தார். ஹீஸ்டன் தமிழ் இருக்கை செயலாளர் பெருமாள் அண்ணாமலை, தமிழ் அமைப்புகளை சேர்ந்த கோசல், பிரபு, சுகந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் இந்திய,அமெரிக்க விண்வெளி கழகங்களின் ஒத்துழைப்பு பற்றியும், தமிழ்நாட்டு கிராமப்புற மாணவர்களுக்கு அவர் செய்து வரும் கல்வி சேவைகள் பற்றியும், மாணவர்களுக்கு எதிர்காலத்தில் விண்வெளித்துரையில் உள்ள வாய்ப்புகளை பற்றி முன்னாள் துனை மேயர் அவர்களிடம் எடுத்துரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *