பொங்கல் பரிசு தொகுப்புக்காக வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் முதன்மை செய்தி

குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாமில் வாழும் குடும்பங்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திவிட்டபடி, ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கையாக, நியாயவிலைக்கடை பணியாளர்கள் வீடுவீடாக சென்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர். வரும் 9-ம்தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பின் விநியோகம் ஆரம்பமாகிறது. இதற்கிடையில், கூட்டுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் கரும்பு கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரும்பு கொள்முதலுக்கான பணம் மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.விவசாயிகள் தங்கள் கரும்பை விற்பனை செய்ய https://rcs.tn.gov.in/rcsweb/sugarcane-form என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் அல்லது மாவட்ட இணைபதிவாளர்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் விவசாயிகளை அணுகும் போது அல்லது தவறான தகவல்களை பரப்பும் போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *