ஜி7 உச்சிமாநாட்டில் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி.

அமெரிக்கா அரசியல் ஆஸ்திரேலியா இந்தியா உலகம் ஐரோப்பா சிறப்பு செய்திகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முதன்மை செய்தி ரஷ்யா வட அமெரிக்கா

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்ட உலகத் தலைவர்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.மாநாட்டில் உலக பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன. பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “வளம், நிலைத்தன்மை மற்றும் மனித நலனை மேம்படுத்த உலக நாடுகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், மோடி – டிரம்ப் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், ஈரான் போர் நிறுத்தம் மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்தும் மாநாட்டில் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *