கேரள வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.
அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத்தால் கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கோட்டயம், இடுக்கி, மலப்புரம், திருச்சூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், வயநாடு, இடுக்கி, கோட்டயம், திருச்சூர், பத்தனம்திட்டா, கண்ணூர், காஉள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை காரண்மாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் ஆன்லைன் மூலம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்களிடம் கலந்துரையாடிய பின் தலைமை செயலகத்தில் உயர் மட்ட கூட்டம் நடைபெற்றது.
அதன் பின் கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கேரளாவில் தற்போது ஏற்பட்டுள்ள மழை பாதிப்பில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் மாயமாகியுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் 316 நிவாரண முகாம்களில் 11,018 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் மற்ற மாவட்டங்களில் மீட்பு பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மட்டும் தண்ணிர் வடிய வில்லை, எனவே இங்கு கொல்லம் மாவட்டத்தில் இருந்து 14 படகுகள் அனுப்பி வைக்கப்பட்டன, மேலும் சூலூர் பகுதியில் இருந்து 2 ஹெலிகாப்டர் திருவனந்தபுரம் வந்துள்ளன, NDRF ன் ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்படும். மேலும்ம் மீட்பு பணிகள் தீவிர படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

