உலகில் சிறந்த உணவுகளை கொண்ட 100 நாடுகளின் பட்டியலை ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள உணவுப் பொருட்கள் உலகளவில் பிரபலமாக இருக்கும். பெரும்பாலும் அந்த இடத்தில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து அந்த உணவுகள் உருவாகின்றன.இந்நிலையில், தனியார் பயண வழிகாட்டி நிறுவனம் ஆன டேஸ்ட்அட்லஸ், உலகில் சிறந்த உணவுகளை கொண்ட 100 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கிரீஸ் 4.6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் அடுத்த 4 இடங்களைப் பெற்றுள்ளன.துருக்கி, இந்தோனேசியா, பிரான்ஸ், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் 6 முதல் 10 ஆவது இடங்களைப் பெற்றுள்ளன.போலந்துக்கு 11 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பாரம்பரிய உணவுகளுக்கு பெயர்போன இந்தியா 4.42 புள்ளிகளுடன் 12 ஆம் இடம் பெற்றுள்ளது. இந்தியாவின் சிறந்த உணவுகளாக ரொட்டி, நான்(naan), சட்னி, பிரியாணி, பருப்பு, பட்டர் சிக்கன், தந்தூரி சிக்கன் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா 13-வது இடத்தில் உள்ளது. பெரு (14), லெபனான் (26), தாய்லாந்து (28), ஈரான் (41) ஆகிய உணவுக்கு பெயர்போன நாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. உணவுகள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் கொடுத்த ரேட்டிங் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டதாக டேஸ்ட்அட்லஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
