ரோமில் உள்ள புனித மேரி பேராலயத்தில் போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் உடல் வாடிகனுக்கு மாற்றாக ரோமில் உள்ள பசிலிக்கா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக திரண்டு வருவதால் பசிலிக்கா பேராலயம் நிரம்பி வருகிறது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில், அவரது உடல் வாடிகனுக்கு பதிலாக ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் எளிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதன் 2-வது நாளான நேற்று, போப் பிரான்சிஸ் கல்லறையை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதற்கேற்ப, ரோம் மட்டுமின்றி, இத்தாலி முழுவதும் பலர் போப் ஆண்டவரின் கல்லறையை பார்வையிட வருகின்றனர்.

