அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்த மாதத்தின் இறுதியில் இந்தியா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துணை அதிபருடன் அவரது மனைவி உஷா வான்ஸும் இந்தியா வருவதாக, தகவல்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில், ஜே.டி. வான்ஸ் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன் அடிப்படையில், அவரது இந்திய வருகை அமெரிக்காவின் துணை அதிபராக அவர் மேற்கொள்ளும் இரண்டாவது சர்வதேச சுற்றுப் பயணமாகும். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்ன் முதல் சர்வதேச பயணத்தின் போது முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் உரையில் சட்டவிரோத குடியேற்றம், மத சுதந்திரம் மற்றும் தேர்தல் தொடர்பான விவகாரங்களை குறித்து ஐரோப்பிய அரசுகளை கடுமையாக விமர்சித்தார். இவரது உரை உலகளவில் பல எதிர்வினைகளை உருவாக்கியது.ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள், அமெரிக்காவுடன் நட்புறவு கொண்ட நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த உஷா வான்ஸ், தனது பிறந்த மற்றும் வளர்ந்த நாட்டிற்கு முதன்முறையாக அமெரிக்காவின் ‘Second Lady’ என்ற பதவியில் வருகை தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
