உலககோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டியில் ஸ்காட்லாந்திடம் மேற்கு இந்திய தீவுகள் அணி தோல்வி அடைந்தது. தகுதி சுற்று போட்டியில் மேற்குஇந்திய தீவுகள் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஸ்காட்லாந்து; முதல் முறையாக உலககோப்பை கிரிக்கெட் 50 ஓவர் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை மேற்கு இந்திய தீவுகள் அணி இழந்தது. முக்கியமான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மே.இ. தீவுகள் அணி 43.5 ஓவரில் 181 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 185 –ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது.உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் மே.இ.தீவுகள் அணி புள்ளிப் பட்டியலில் பின்தங்கி இருந்தது. முக்கியமான ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் தோல்வி அடைந்ததால் உலகக்கோப்பைக்கு செல்லும் வாய்ப்பை முழுமையாக பறிகொடுத்தது. தகுதிச்சுற்று போட்டிகளில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்துக்கு எதிராக மே.இ.தீவுகள் அணி தோல்வி அடைந்தது. 3 சிறிய அணிகளிடம் படுதோல்வி அடைந்ததால் முதன் முறையாக போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. இந்தியாவில் இந்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் முன்னணி அணியான மே.இ.தீவுகள் விளையாடாது.