ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இந்திய அணி மொத்தம் 27 தங்க பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக 37 பதக்கங்களை வென்று ஜப்பான் முதலிடத்தையும், சீனா 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இந்த தொடரில் இந்திய அணிக்கு 6 தங்கம், 12 வெள்ளி மற்றும் 9 வெண்க பதக்கங்கள் கிடைத்துள்ளன.
நேற்று நடந்த 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் மூன்றாவது இடம் பிடித்து தமிழக வீரர் சந்தோஷ் வெண்கல பதக்கத்தை வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் பதக்கம் வெல்வது என்பது இதுவே முதன்முறையாகும்.
மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஒட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதியார்ராஜீ 13 புள்ளி 9 நொடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் பந்தயத்தில் முதன் முறையாக இந்தியாவிற்கு தங்கம் கிடைத்தது. இதே போன்று ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீரர் அஜய்குமார் சரோஜ் தங்கம் வென்று அசத்தினார். ஆடவருக்கான மும்முனைப் போட்டியில் இந்திய வீரர் அப்துல்லா அபூபக்கர் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி மொத்தம் 27 பதக்கங்களை வென்று 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. ஜப்பான் அணி முதலிடத்தையும், சீனா இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
