வங்கதேசம்: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமால் ஆகியோரை இந்தியா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக கோரியுள்ளது.வங்கதேச சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இருவருக்கும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் காரணமாக மரண தண்டனை வழங்கியதால் இந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.வெளியுறவுத் துறை கூறியது:“மரண தண்டனை பெற்ற நபருக்கு அடைக்கலம் தருவது நட்பற்ற செயல்; இது நீதியை அவமதிப்பதாகும்.”ஹசீனா 2024 ல் அரசியல் குழப்பத்தின் போது இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவின் பதில் — இந்த விவகாரத்தை “கவனித்து வருகின்றோம்” என்னும் அளவிலேயே உள்ளது.இந்த கோரிக்கை இனி இந்தியா–வங்கதேச உறவுக்கு முக்கிய சோதனையாக பார்க்கப்படுகிறது.

