கிரிக்கெட் உலக கோப்பை இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ; ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி விளையாடும் என அறிவிப்பு

ஆஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா இலங்கை உலகம் செய்திகள் நிகழ்வுகள் பாகிஸ்தான் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனைத்து நாடுகளும் தங்களது அணியை அறிவிக்க வேண்டும் என்பதால் அந்தக் கெடு இன்றுடன் முடிவடைகிறது.
பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஆகியோர் நீண்ட ஆலோசனைக்குப் பின் 15 பேர் கொண்ட அணியை ஏற்கனவே தயார் செய்து விட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் 15பேர் கொண்ட பட்டியலை இன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது அந்தப்பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வீரர்கள் விவரம் பின்வருமாறு : ரோகித் ஷர்மா ( கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சூர்ய குமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.