சீன நீறுவனங்களின் சூதாட்டம் மற்றும் கடன் தொடர்பான செயலிகளை முடக்க மத்திய அரசு முடிவு

அரசியல் இந்தியா உலகம் சீனா செய்திகள் நிகழ்வுகள் வரும் நிகழ்ச்சிகள்

சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தங்களது பணத்தை பறிகொடுத்து தற்கொலைக்கு தூண்டப்படும் நிலை உள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் கடன் செயலிகள் மூலமும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பிட்ட தொகையை கடனாக வழங்கிய அதற்கு வட்டி என்ற பெயரில், பல்வேறு நிபந்தனைகளை திணித்து பெரிய தொகையை கட்டுமாறு வலியுறுத்துகின்றனர்.
அவ்வாறு தவனையை கட்ட மறுக்கும் வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் வசூலித்து வருகின்றனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடுமுழுவதும் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உடனடி மற்றும் அவசர நடவடிக்கையாக சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.