இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் குறித்த விரிவான அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகங்கள் முயன்றால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் திங்கட்கிழமை தொடங்க இருக்கும் நிலையில், விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மூன்றாயிரத்து 185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுத்தேர்வில் மாணவ மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு அறையில் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.