திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் உள்ள யானை காந்திமதி, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது.காந்திமதி யானை, 1985ம் ஆண்டு சங்கரன் பிள்ளை என்பவரால் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டது. நெல்லையில் பக்தர்களின் அன்பைப் பெற்ற காந்திமதி, வயது 55 நெல்லையப்பர் கோவிலின் முக்கியமான திருவிழாக்களில், சுவாமி சப்பரங்களுக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட காந்திமதி யானை, கோவிலிலும், திருவிழா காலங்களில் நான்கு ரத வீதிகளில் மக்கள் அன்புடன் ரசித்து வந்தனர். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில், தேசியக்கொடியை மரியாதை செலுத்தும் போது காந்திமதி யானையின் சத்தம் அனைவரையும் பரவசமாக்கும். ஆனால், 2020ல் காந்திமதி யானைக்கு ஏற்பட்ட தசை பாதிப்பு காரணமாக, அது நிற்கவோ நடக்கவோ முடியாத நிலை உருவானது. இருப்பினும், திருவிழா காலங்களில் யானை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. கடந்த 40 நாட்களாக தசை பாதிப்பால் மிகவும் அவதியுற்ற யானை, நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது, வலியை தாங்க முடியாமல் சாய்ந்து படுத்து விட்டது. இன்று காலை யானையை எழுப்ப முயற்சித்த போது, பாகன் யானை உயிரிழந்ததாக கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.