குவைத் நாட்டில் திமுக இளைஞரணிச் செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்; டி-20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு

அரசியல் அரபு நாடுகள் இந்தியா உலகம் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

அயலக தி.மு.க. குவைத் இளைஞர் அணி சார்பாக DMK Youth Wing செயலாளர், மாண்புமிகு இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாடு(ம)சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குவைத் நாட்டில் “Chinnavar Birthday Celebration Cup” என்ற மாபெரும் T20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த மெகா கிரிக்கெட் போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளதாக தகவல்.
வருடந்தோறும் திமுகவினர், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடுவது வழக்கம். அது தமிழ்நாடு முழுவதும், மாவட்டம், வட்டம், மற்றும் கிராமங்கள் தோறும் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்வார்கள். ஆனால் வெளிநாட்டில் இதுபோன்று பெரிய அளவில் ஒரு போட்டியை நடத்துவது இதுவே முதன்முறை. குவைத் நாட்டில் இப்போட்டியை புலம்பெயர்ந்த இந்திய தமிழர்கள் சங்கம், திமுக என்ஆர்ஐ விங் ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *